பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


gf கின்றது. யானையும் வாய்விட்டுப் பிளிறிக்கொண்டு மடிந் தொழிகின்றது. ஆயினும், சினந்தணியாமல் அங்கேயே நின்றவண்ணம் பெருமுழக்கம் செய்து மலையையே அதிரவைக்கின்றது. இப்படி ஒரு காட்சி." திருவேங்கட மலையின் உயர்ச்சியைக் காட்டும் போக்கில் மூங்கில்களின் வளர்ச்சியுையும் காட்டு கின்ருர் இந்த ஆழ்வார். திருமலையின் மூங்கில் சந்திர மண்டலத்தளவும் நீண்டு வளர்ந்துள்ளது. அது மதியைப் பற்றிக்கொண்டிருக்கும் இராகுவையும் த க ர்த் து க் கிரகணத்தையே விடுவித்துவிடுகின்றது. "தீங்கழை போய் வென்று, விளங்குமதி கோள்விடுக்கும் வேங் கடமே!' என்பது ஆழ்வாரின் திருவாக்கு. இத்தகைய பல காட்சிகளே திவ்விய கவியும் காட்டுவார். அதனை மூன்ருவது பொழிவில் கண்டு மகிழ்வோம். பூதத்தாழ்வார் திருமலையில் வாழும் வானரங்கள் எம்பெருமானுக்குச் செய்யும் பூசனைகளைக் காட்டு கின்ருர். 'போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும்." (போது-விடியற்காலம்; சுனை - நீர்நிலை: ஏத்தும் துதிக்கும் ) இதனை அடியொற்றியே கம்பநாடன் சித்திர கூடக் குரங்குகளின் செயல்களை எடுத்துக் காட்டுவன். இங்குள்ள குரங்குகள் மூப்படைந்து கண்ணிடுகிப்போய் வழியறி 02. மூன்.திருவந். 71. 63. மூன்.திருவந். 72. கோள் - கிரகணம், 64. இரண்-திருவந்-12,