பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


94 "சென்று வணங்குமினே சேணுயர் வேங்கடத்தை கின்று வினைகெடுக்கும் நீர்மையால்" (வினை பாபம்.) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. வேங்கடம்’ என்ற சொல்லின் பிற்காலப் பொருளை விளக்குவது போல் உள்ளது இப்பாடற் பகுதி. இதனை மேலும் அரண் செய்வது போல், "வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதும்' என்று இன்னெரு பாடலின் அடி அமைந் திருப்பதையும் காண்கின்ருேம். இவர் திருச் சந்த விருத்தத்திலும் "வேங்கடம் அடைந்த மால்பாதமே அடைந்து நாளும் உய்மினே' என்று ஆற்றுப் படுத்து வதையும் நாம் காணுமல் இல்லை. இம்மலை வானேர்க்கும் மண்ணுேர்க்கும் வைத்தமாநிதியாயிருப்பதாக இன் ளுெரு பாசுரத்தில் குறிப்பிடுகின்ருர், ...'தண்ணருவி வேங்கடமே வாஞேர்க்கும் மண்ளுேர்க்கும் வைப்பு.' என்று பேசுவதைக் காண்கின்ருேம். வேங்கடமலையின் எழிலும் கருப்பொருள் வளமும் இந்த ஆழ்வாரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 'ஊர்' அல்லது பதி' என்ற கலம்பகத்துறைச் செய்யுள் போல் அமைந்துள்ள ஒரு பாடலைக் காண்போம். 'நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்-பன்மணிச்சீ 70. நான்.திரு. 42. 71. நான்.திரு. 48. 72. திருச்சந். 81. 73. நான்.திரு. 45.