பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


167 போல் என்னுடம்புடன் அணைந்து என் ஆற்றல் முழுவ தையும் கொள்ளை கொண்ட பெருமானுக்கு நான் இங்ங்ணம் நோவுபட்டுக் கிடக்கும் நிலையை எடுத்துக் கூறுங்கள்' என்கின்ருள். நான்காவது செய்தி : இது உயிரனைய செய்தியானதால் சொல்லும் போதே மிகப் பணிவாகத் தொடங்குகின்ருள். 'சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்’’’ (சங்கம்-சங்கு; மா-பெருமை வாய்ந்த, சே.அடி செவ்விய திருவடி, அடிவீழ்ச்சி - அடியேனுடைய.) என்ற பீடிகையைக் காண்மின். அதற்குப்பிறகு சொல்ல வேண்டிய செய்தியைத் தெரிவிக்கின்ருள். 'கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் தங்குமேல் என்ஆவி தங்குமென்று உரையிரே...' " அவர் என்னுடன் கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத்தடங்களில் குங்குமக் குழம்பு பூசி அணி செய்து வைத்துள்ளேன் ; அதனைப் பயனுடையதாம்படி செய்வாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கள்' என்கின்ருள். என் ஆவி தங்கும் என்ற சொல் நயத்தை நோக்குமின். “ஒருநாள் அணைவது போகத்துக்குப் போதாது; அஃது உயிர் தரிப்பதற்கே சாலும்’ என்ற 98. நாச்-திரு. 8:7 99. நாச். திரு. 8 ; 1