பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


115 கின்ருேம். 'சேயன் அணியன் என் சிந்தையுள் திறன் மாயன்' என்று சொல்லிக் களிக்கின்ருர், திருவேங்கட மாமலே மேய ஆயன் அடியல்லது மற்று அறியேனே என்றும், திருவேங்கட மாமலை மேய எந்தாய்! இனி யான் உனை என்றும் விடேனே' என்றும் பேசித் தமக்குப் பரபக்தி வாய்த்த பேற்றினைக்கூறி இனியராகின்ருர். 'பரமபதம், திருப்பாற்கடல் முதலான திவ்விய தேசங் களைக் கைவிட்டு, யோகியர் மனத்தையும் தேடி யோடாமல், என்னுடைய அழுக்கு நெஞ்சில் வந்த புகுந்தாயே என்று எம்பெருமானின் சீல குணத்தில் ஆழங்கால் படுகின்ருர். - இவ்விடத்தில் ஒன்றை நினைவு படுத்த விரும்புகின் றேன். வைணவ தத்துவப்படி எம்பெருமான் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் இருக்கின்ருன் எந்த நிலையில் இருந்தாலும் எம்பெருமான் ஒருவனே யாவான்; எல்லோருக்கும் எளி தாகக் கிட்டும்படியாக இருப்பது அர்ச்சைநிலை. இதுவே ஆழ்வார்களின் திருவுள்ளத்தைக் கவர்ந்த நிலை. இந்த நிலையில்தான் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருந்து எண்ணற்ற மக்களுக்குச் சேவை சாதித்துக் கொண்டிருக் கின்ருன். அத்தகைய எம்பெருமான் வேண்டுவார்க்கு வேண்டியனவற்றை ஈவதற்குத் திருவேங்கடமலையில் ஓயாது ஒழியாது, பகல் என்றும் இரவு என்றும் பாராது, உட்காரவும் படுக்கவும் நேரமின்றி நின்ற திருக்கோலத் தில் சேவை சாதிக்கும் நிலை இவர் உள்ளத்தைக் கவர்ந்த தால் 'சிந்தாமணியே!” என்று உளங்கனிந்து பேசு கின்ருர். - - ஒருவனுடைய பேற்றுக்கும் இழவுக்கும் காரணமாக இருப்பது மனம், மன ஈடுபாடு இன்றேல் ஒன்றும் நட வாது. இத்தகைய மனம் தீய போக்குகளில் சென்று