பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


118 சேர்க்கின்றன் என்கின்ற திருக்குணத்தைக் கண்டு தன் நெஞ்சு அத் திருவேங்கட முடையானுக்குத் தொண்டு பூண்டதை உவக்கின்றதாகச் செல்லுகின்றது இப் பாசுரம். இப் பாசுரத்தின் சொன்னயத்தையும், உரை நயத்தையும் அடியார்களிடையே இதுபற்றி நிகழ்ந்த சுவையான உரையாடலையும் ஈண்டுக் குறிப்பிட விரும்பு கின்றேன். 'இண்டை கொண்டு என்றலே போதும், இண்டை யாயின கொண்டு என்றதன் கருத்து என்ன ? எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமென்ற துாய உள்ளத்துடன் கொள்ளுகின்ற பூ எதுவாயினும் குற்ற மில்லே, செண்பகம் மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் பூக்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்கின்ற விதியொன்றும் இல்லை. ஏதேனும் ஒரு பூவாயிருக்கலாம் என்பது தோன்றவே ஆயின என்ருர், உரை மன்னன் பெரியவாச்சான் பிள்ளையும், பூமாலையென்று பேர் பெற்றனவற்றைக் கொண்டு என்று வியாக்கியானித் தருளியிருப்பதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. பராசரப்பட்டருக்கும் நஞ்சியருக்கும் நடைபெற்ற தாக ஈட்டாசிரியர் குறிப்பிடும் உரையாடல் இன்சுவை மிக்கது. அது பரிவதில் ஈசனைப் பாடி' எனத் தொடங்கும் திருவாய் மொழிப் பாசுரம் பற்றியது. அப் பரசுரத்தின், 'பிரிவகை யின்றி நன்னீர் தூய் புரிவதுஉம் புகை பூவே” என்ற அடிகளே உபன்யசிக்கும்போது புரிவதும் புகை பூவே என்ற சொற்ருெடரைத் திருவுள்ளம்பற்றி

47. திருவாய். 1.6.1