பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


2క சொல்வது போல உருக்கொண்டு தோழிப் பாசுரம்' என்றும், தலைவி பேசுவதுபோல் வடிவெடுத்துத் தலைவிப் பாசுரம் என்றும் பெயர்களைப் பெறும். இங்ங்னம் மூன்று வகையாகக் கூற்றுகள் நிகழ்ந்து பாசுரங்களில் வெளிவந்தாலும், பாசுரங்கள் பேசு கின்றவர்கள் ஆழ்வார்களே யாவர். திருவரங்கப் பெரு மான் மீது தாய்ப் பாசுரமாக அருளிய பதிகத்தின்' இறுதிப் பாசுரத்தில் வண்குருகர்ச் சடகோபன், முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை ஆயிரத்துள் இப்பத்தும் என்றும், மலை நாட்டுத் திருப் புலியூர் எம்பெருமான் மீது தோழிப் பாசுரமாக அருளிய பதிகத்தின்' பலசுருதிப் பாசுரத்தில் தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல், நேர்பட்ட தமிழ்மாலே ஆயிரத்துள் இப்பத்தும் என்றும், மலைநாட்டுத் திருமூழிக் களத்து உறையும் எம்பெருமான் மீது தலைவிப் பாசுரமாக அருளிய பதிகத்தின்'" இறுதியில் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்துள் இப்பத்தும் என்றும் கூறியிருப்பதனல் இதனை அறியலாம். ஒர் ஆருனது பல வாய்க்கால்க ளாகப் பெருகிலுைம் அவற்றுக்கு முக்கியமான பெயர் ஒன்றேயாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ங்னமே ஆழ்வாரது சொல் மாலைகள் மூன்று நிலை மைகளாக வழிந்து புறப்பட்டாலும், அவை ஆழ்வார் களது பாசுரங்களாகவே தலைக்கட்டி நிற்கும். எம்பெருமானைப் பற்றிக் கூறும் நூல்களில் திருவாய் மொழியும் ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். 161. திருவாய், 7-2. “கங்குலும் பகலும்’ 162. திருவாய். 8-9 கருமாணிக்க மலைமேல்" 163. திருவாய். 9.7, 'எம் கானல் அகம்”