பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


$35 சோர்வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும். அறிவியாது ஒழியில் இவள் வாழாள். இந்நிலை யில் செய்ய வேண்டியது என்ன ?’ என்பதாக. தோழி இங்ங்னம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தலைவியின் பெற்ருேரும் மற்ருேரும் தலைவியின் வடிவ வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்ருள். தானும் அவர்களுடன் ஆராய்வதாகச் சேர்ந்து கொண்டு இதனை விலக்க வேண்டுமென்று உறுதி செய்கின்ருள். அந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே திருப் புலியூர் மாயப் பிரான் மீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற இத் திருவாய்மொழி. இதுவே அகப் பொருள் நூலார் குறிப்பிடும் அறத்தொடு நிற்றல் என்பதாகும். இன்னேர் இடத்தில் இப்பதிகம் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது." ஆண்டுக் கண்டு மகிழ வேண்டுகின் றேன். உடன் போக்கு தலைவனும் தலைவியும் பகற்குறி யிலும் இரவுக்குறியிலும் பலகாலும் கூட்டம் நிகழ்த்தி வருவதனால், அவர்களது மறையொழுக்கம் வெளிப் பட்டு அலராகும். இதனை அறிந்த தலைவன் தோழியின் விருப்பத்திற் கிணங்கச் சிலகாலம் அவ் வலர் அடங்கு மாறு கூட்டம் நீங்கி வேறிடத்திற்குச் சென்று உறை வான். அவ்வாறு நீங்கி உறைதலை அகப்பொருள் நூல்கள் ஒருவழித் தணத்தல்' என்று குறிப்பிடும். அலரறிந்த தலைமகன் இவ்வாறு ஒருவழித் தணந்து நில்லானுயின் அவன் தலைவியைத் தோழியின் துணைக் கொண்டு ஆங்கு நின்றும் பெயர்த்து ஒருவருக்கும் தெரியாமல் நள்ளிரவில் தன் மனையிடத்துக்கு உடன் T182, மலைநாட்டுத் திருப்பதிகள்-கட்டுரை 9,