பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


#3% மலையினைச் சென்றடைவீர்களாக" என்று முதலில் கூறுகின்ருன் கதிரவன் மைந்தன். அடுத்து, அம்மலையில் வதியும் மாமுனிவர்களின் பெருமையைப் பேசுகின்ருன் அருக்கன் மைந்தன். 'இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்ருதே இமையோர் ஏத்தும் திருவினையும் இடுபதந்தேர் சிறுமையையும் முறையொப்பத் தெளிந்து நோக்கிக் கருவினைய திப்பிறவிக் கென்றுணர்ந்தங் கதுகளையும் கடையின் ஞானத்து அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டுளtண் டிருந்தும்.அடி வணங்கற் பாலார்." இருவினை - நல்வினை, தீவினை; இமையோர் . தேவர்கள்; ஏத்தும் . புகழும்; இடுபதம் - பிச்சையாக இடும் சோறு; கரு மூலகாரணம்; களையும்-நீக்குதற்கு உரிய கடை - எல்லை.) "அம்மலையில் வாழும் மாமுனிவர்கள் வினைகள் விளை தற்குக் காரணமான எந்தக் கருமங்களையும் செய்யார்; 'ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் பெற்றியினை உடையார்;இப்பிறவிக்கு மூலகாரணம் வினையேஎன்பதை நன்கு அறிந்தவர்கள்; அதனைப் போக்குவதற்குரிய எல்லேயில்லாத தத்துவ ஞானத்தை உடையவர்கள். இவர்கள் இருவினைகட்கும் பகைவர்களாகத் திகழும் பெரியோர்கள். அம் மலையிலுள்ள அவர்கள், இருந்த இடத்திலிருந்தே திக்கு நோக்கித் தண்டம் சமர்ப் பிப்பதற்கு உரியவர்களாவர்” என்று அவர்கள் பெருமை யைப் போற்றியுரைக்கின்ருன். 186. கிட்கிந் நாடவிட்ட-21