பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171


is/1 'ஏறுக டாவுவர் அன்னங்க டாவுவர் ஈரிருகோட்(டு) ஊறுக டாம்மழை ஓங்கல் கடாவுவர்.' |ஏறு-காளை, ஈர் இரு கோடு-நான்கு தந்தங்கள்; கடாம்-மதநீர்; ஓங்கல்-மலைபோன்ற ஐராவதம்.) . இதில் உருத்திரபதவி, பிரம்மபதவி, இந்திரபதவிகள் பெறுவதாகக் கூறப்படுவதைக் காண்க. திருவேங்கட முடையானின் திருநாமங்கள் என்னென்ன தரும் என்பதனை இன்னுெரு பாசுரத்திலும் குறிப்பிடுகின்ருர். "துன்பம் களையும் சனனம் களையும் தொலைவறுபேர் இன்பம் களையும் கதிகளையும் தரும்.”* (துன்பம் - கிலேசம்; சனனம் , பிறப்பு; களையும்அழிக்கும்; தொலைவு அறு-முடிவு இல்லாத, கதிகள். பதவிகள்.) இதில் எம்பெருமானின் திருநாமங்களின் மகிமை பரக்கப் பேசப்பெறுவதைக் காண்க. ஆழ்வார் பாடல்களின் செல்வாக்கு : அன்பர்களே, நம் திவ்வியகவி ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டு மகிழ்ந்தவர்; அவற்றின் பக்திச் சுவையில் திளைத்தவர். இதல்ை இவற்றின் சாயல் இவர் பாசுரங்களிலும் தென்படுகின்றது. நாலாயிரத்தின் கருத்துகளும் சொற்ருெடர்களும் அய்யங்கார் பாசுரங்களில் மிளிர்வதை எங்கும் காண 31. LIть, 160-68 32. பாடல்-95