பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


174 'தூர விரும்புண் டரிக்குமிக் காயத்தைச் சூழ்பிணிகாள்! நேர விரும்புண் டரர்க்கருள் வானெடு வேங்கடத்தான் ஈர விரும்புண் டரீகப்பொற் பாதங்க ளென்னுயிரைத் தீர விரும்புண் டரோக்கு மாறுள்ளம் சேர்ந்தனவே.' [தூர-தொலைவில்; இரும்-இருங்கள்; புண்-தடை; காயம்-உடம்பு; பிணிகாள்-நோய்களே; புண்டரர்.திரு மண் காப்புடையவர்; ஈரம் - குளிர்ச்சியான; இரும். பெரிய, தீர முழுவதும்; நீர் ஆக்கும் ஆறு . நீர் போலாக்கும்படி: இதில் தான் இடைவிடாது எம்பெருமானது திருவடி களைத் தியானம் செய்யத் தொடங்கி வினைகள் அனைத் தும் தொலையுமாறு அவன் கருணைக்கு இலக்காகி விட்ட தாகவும், ஆதலால் வினைகளின் விளைவால் வருவன வான நோய்களால் ஒன்றும் நலிவு செய்ய முடியாது என்ற துணிவு கொண்டு நோய்களே விளித்து விரைந் தோடிப் போகுமாறும் அச்சுறுத்திப் பேசுகின்ருர். இந்தப் பாசுரம், நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள்போல் கிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெறஉய்யப் போமின்; மெய்க்கொண்டு வந்து புக்கு வேதப் பிரானுர் கிடந்தார்; பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.' 42. பாடல். 43. பெரியாழ் திரு. 5, 2: