பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


177 (பற்றி-நிலைத்து; கலைபோய் - ஒளி மழுங்கப் பெற்று; வெளுத்து நிறம் மாறி, வற்றி - தேயப்பெற்று - பனி மல்கி - நீர் நிரம்பப் பெற்று, மாசு - துரசி; மொழிச் சியைப் போல் - தலைமகள் போல்; வெற்றியிராமன் - சயத்தையுடைய இராமன்; வேட்டாய் கொல் - விரும் பினயோ.) தலைவனைப் பிரிந்து தலைவி வருந்துகின்ற பொழுது கட்புலனாகும் பொருளெல்லாம் வருந்துகின்றனவாகத் தோன்றுதலால், தோழி திங்களை நோக்கி 'நீயும் வேட் கையால் நலிவுபடுகின்றனயோ?” என்று வினவுகின்ருள் இப்பாசுரத்தில். நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பாசுரத்தை நோக்குவோம். "கைவாய எம்மேபோல் நாள்மதியே நீஇந்நாள் மைவான் இருளகற்ருய்; மாழாந்து தேம்புதியால்; ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமாளுர் மெய்வா சகம்கேட்டுஉன் மெய்ந்நீர்மை தோற்ருயே?" (நைவு - நைந்து போதல்; மதி - சந்திரன்; மை - கரிய, மாழாந்து - மயங்கி; தேம்புதி - குறைபடுகின்ருய்; ஐவாய் - ஐந்து முகம்; ஆழி - சக்கரப்படை, மெய் நீர்மை - உண்மையான குணம்; தோற்ருய் - இழந் தாய்.1 இங்ங்னம் ஆழ்வார் பாசுரங்களே அடியொற்றி வந்த பல பாசுரங்களை இந்நூலில் காணலாம். 47. திருவாய் 2-1 ; 6 திரு.-12