பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220


22s; இரங்கல் : தலைவியொருத்தி திருவேங்கடமுடையான் மீது பெருங்காதல் கொள்ளுகின்ருள். இதனைச் செவிலித்தாய் எப்படியோ அறிந்து கொள்ளுகின்ருள். தோழிமார்களே அழைத்து அவர்களிடம் தலைவியின் தன்மையை இரங்கிக் கூறுவதாக அமைந்த பாடல் இது: 'ஒளிக்குங்கு மக்கொங்கை யுகளத்தின் மடவீர்! உத்துங்க சிகரத்தின் ஒருசேட கிரிமால் அளிக்கும் பெருங்காமம் உள்ளத்தி னுள்ளே அடங்காது கொல்லோ? விடங்காலும் விழியாள் கிளிக்கும் குயிற்கும் சிகிக்கும் சகிக்கும் கீதத் தளிக்கும் கபோதத் திரட்கும். களிக்கின்ற பூவைக்கும் அன்னங்களுக்கும் காருக்குமே சொல்லும் ஊரென் சொலாதே!" (ஒளி-பிரகாசமான, உத்துங்க-உயர்ந்த ஒரு-ஒப் பற்ற, சேடகிரி-சேஷாசலம்; மால்-திருமால்; விடம் காலும்-நஞ்சை உமிழும்; சிகி.மயில்; சகி-தோழி; கீதத்து அளி-இசையையுடைய வண்டுகள்; கபோதம்மாடப்புரு, பூவை-நாகணவாய்ப்புள்; கார்-மேகம்; ஊர்-ஊர்மக்கள், ! “பிரகாசமுடையனவும் குங்குமக் குழம்பை அணிந் தனவுமான கொங்கைகளையுடைய இளம் பெண்களே உயர்ந்த கொடுமுடிகளையுடைய அரவக்கிரியின்மீது எழுந்தருளியுள்ள எம்பெருமான் என் மகளுக்குக் கொடுத்தருளிய பெருவேட்கை உள்ளத்தினுள் அடங்க மாட்டாது போலும். நஞ்சையுமிழும் நயனங்களையுடைய 189, பாசுரம்-43,