பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223


223 தவம்: உடலை வருத்தும் தவத்தை விலக்கிப் பகவானத் தியானிக்குமாறு வற்புறுத்தல் ‘தவம்’ என்னும் கலம்பக உறுப்பின் இலக்கணமாகும். "மானிடர்காள் கானிலுடல் வாடப் பெருந்தவம் செய்(து) ஏனிடருற் றீர்?பணிவெற்(பு) எம்பெருமான்- தானே தவமதுவே வீசுதுழாய்த் தாமனடி உள்ளின் தவமதுவே யாவருக்கும் grsir" 19: (கான்-காடு; இடர்-துன்பம்; பணிவெற்பு-சேஷா சலம்; தாமன் - மாலையையுடையவன்; உள்ளின் . தியானித்தால்.) இதில், ‘எம்பெருமானை அடைவதற்கு விரோதியான உடல் தொடர்புகளை அறுத்துக்கழித்து எம்பெருமானப் பெறவேண்டுமென்று உடலை வருத்தித் தவம் செய்தல் வேண்டா; அடியார் பக்கல் மிக்க அருளுடையவளுகிய எமது திருவேங்கடமுடையானச் சென்று சேர்ந்து விரோதிகளனைத்தையும் போக்கப் பெறுவீர்” என்று தவம் விலக்கித் தண்ணளிசேர் அண்ணலிடம் தளர்வு இல் நினைவினரை ஆட்படுத்தும் தகவுடைமையைக் காண்கின்ருேம். குறம் : தலைமகனிடத்துக் காதல் கூர்ந்த தலைவி அவனைப் பிரிந்திருக்கும்பொழுது செய்வது அறியாது மயங்கி + 192. பாசுரம்-20.