பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236


236 மங்களா சாஸநம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாறவைத்துச் சொல்லுகிருர்; அன்று யுத்தத்திற் பிறந்த ப்ரமாதத்துக்கு இன்று மங்களா சாஸநம் பண்ணுகிருர் என்றுமாம்” என்ற இன்சுவை மிக்க பகுதியைச் சுவைத்து மகிழ்க. பிறிதொரு பாடலிலும் நெஞ்சிற்கு உபதேசிக்கும் முறையில் பக்திச்சுவை தெளிவாக நிழலிடுகின்றது. "வேங்கடவா சத்திருமால் மேல்பத்தி யுள்ளசனர் தாங்கடவா நிற்பர்பவ சாகரத்தை-தீங்கடவா சித்தமே கண்ணன்பால் சிந்துமதித் தோனவன நித்தமே கண்ணன்பால் c." (வாசம்-வாசம் செய்யும்; பத்தி-பக்தி; சனர்-மக் கள்; கடவா-தாண்டி, தீங்கு அட தீமைகள் நீங்கும் பொருட்டு; பவ சாகரம்-பிறவிக் கடல்; சிந்து மதித் தோன்-பாற் கடலைக் கடைந்தவன்; நித்தம் - நாள் தோறும்; கண்ணன்பால்-கண் + அன்பால்; அன்பு-பக்தி; கண்.தியானிப்பாயாக). திருவேங்கட முடையான்மீது பக்தியுடைய மக்கள் பிறவிப் பெருங்கடலைத் தாண்டி முக்தியாகிய கரையை அடைவர் என்று உறுதியையுடைய ஆசிரியர் அப் பெரு மானைத் தியானிக்குமாறு மனத்திற்கு அறிவுறுத்து கின்ருர் இப்பாடவில். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன்அடி சேரா தார்." 209. பாசுரம்-2. 210. ශ්‍රறள்-10,