பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது இந்த நூலின் பெயரைக் கண்டவுடனே இது திருவேங்கடத்துறை அண்ணலைப் பற்றிய நூல் என நம்மை மயக்கும். ஆனால், உண்மையில் இஃது அப்பெரு மானப் பற்றிய தன்று. இது நெல்லை மாவட்டத்தில் பொருநை நதிக் கரையில்" உள்ள திருநாங்கூர் எம் பெருமான்மீது பாடப்பெற்ற ஒரு தூதுப்பிரபந்தமாகும். 'திருவேங்கட நாதனுார்' என்ற பெயரே, இப்போது திரு (வேங்கட) நா (த) னுரர்' என்ற முறையில் குறுகி, திரு நாங்கூர்’ என வழங்குவதாகச் சொல்லப்பெறுகின்றது. இந்த ஊரில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்மீது பாடப்பெற்ற இச் சிற்றிலக்கியம் 187 கண்ணிகளையும், இறுதியில் ஒரு வெண்பாவையும் கொண்டது. கடவுள் மாட்டு மானிடப் பெண் டிர் நயந்த பக்கம் என்ற விதிக் கிணங்க இது பெண்பால் ஆண்பால்மீது விடுத்த துTது ஆகும். அன்பர்களே, எனக்குக் கிடைத்த குறுகிய காலத் திற்குள் மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களைப் பற்றியே என்னல் அறிய முடிந்தது. இவற்றிற்கு மேலும் வேங்கடநாதனைப்பற்றிப் பல நூல்கள் தோன்றி இருக் கலாம். அவை கூறப்பெருத குறையை அன்பர்கள் பொறுத்தருள்வார்களாக. எனக்கு எ வை யேனும் கிடைத்தால், இச் சொற்பொழிவுகள் நூல் வடிவம் 264. திருநெல்வேலி நகருக்கு சுமார் இந்துகல் தொல் வில் உள்ள திருவேங்கட நாதனூர் எம்பெருமான் மீது பாடப் பெற்ற நூல்.