பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


14 முதலில் ஐயரிைதனுர் வாக்கினைக் காண்போம் : 'வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்(கு) இருளியும் ஞாலத்(து) இடரெல்லாம் நீங்க அருளியும் ஆழி யவன்." (வெறி-வாசனை ; அறை-ஒலிக்கும் ; நெறி-முறைமை.) என்ற பாடலில், வேங்கடம் கு றிப்பிடப் பெற்றிருப்ப துடன் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவாழியைத் தரித்துக் கொண்டிருக்கும் குறிப்பும் ஆழியவன்' என்ற சொல்லால் காட்டப் பெற்றிருத்தல் நோக்கத்தக்கது. இனி, சிலப்பதிகாரத்தில் வரும் வடவேங்கடம்: பற்றிய குறிப்பில், நம் கருத்தினைச் செலுத்துவோம். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பெறும் மாங்காட்டு மறையோன் தலயாத்திரை செய்து வருகின்ருன். உறையூரையடைந்த கோவலனும் கண்ணகியும் கவுந்தி யடிகளுடன் வைகறை யாமத்து அவ்வூரைக் கடந்து தென்திசையை நோக்கிச் செல்லுபவர்கள், கனன்று எழும் கதிரவன் வெப்பத்தைப் பொறுக்கலாற்ருது வழியில் ஒரு மருதநிலப் பரப்பில் வனப்புற்றுத் திகழாதின்ற ஒர் இளமரக்காவில் வழிப்போக்கர் தங்கு வதற்கென்று அமைக்கப்பெற்றிருந்த இருப்பிடத்தில் இளேப்பாறுதற் பொருட்டுச் சென்று புகுகின்றனர். அப்பொழுது தென்றிசையினின்றும் வடதிசை நோக்கிச் செல்லும் மறையோனும் அவ்விடத்தில் வந்து புகுகின்ருன் ; வருகின்றவன் தீது தீர் சிறப்பின் 12. புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண் படலம்-புலவர் ஆற்றுப்படை (4.3) உதாரணச் செய்யுள்,