பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276


276 பண்பும், குழந்தையின் நெஞ்சுபோல் குழைவான நெஞ் சத்தையும் உடையவர். இவருடைய பக்தியினையும் தமிழ் மரபினைப் போற்றும் பாங்கினையும் நூலெங்கும் காணலாம். - இத்தொகுப்பு நூலே பத்மவிபூஷண மகாவித்து வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமி களின் ஆசியுரை அணி செய்கின்றது. "இன்றெனக்கு நல்விடிவு திருவேங்கடமாலே என் முடிமீதேறிற்று. உவந்தேன். உவப்பைவிட வியப்பே அதிகம். அநாயாச மான கவிதை. உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதை. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பேரின்ப மெய்தினேன். தமிழ்ப் பா நிபந்தனைகட்குக் கட்டுப் பட்டுச் சுவைக்கேடு ஆகாமே ஆக்கியிருக்குமழகு தனிச் சிறப்பு வாய்ந்தது” என்ற சுவாமிகளின் திருவாக்கால் நூலின் சிறப்பினை நன்கு அறியலாம். “மொழிபெயர்ப்பு என்பது ஒர் அரியகல; இலக்கியப் படைப்புகளில் மொழி பெயர்ப்பு நூலும் ஒருவகை. வழிநூல் வகைகளைக் குறிப்பிடுமிடத்து தொல் காப்பியர் மொழி பெயர்ப்பினே அதர்ப்படயாத்தல்’ என்று கூறுவர்.' மொழிபெயர்ப்பு நூலைப் படிப்போருக்கு "இஃது ஒரு மொழிபெயர்ப்பு’ என்று தோன்ரு வண்ணம் அமைதல் வேண்டும். இந்த அரியபண்பினை திருவேங்கட வன் மாலே என்ற தமிழ்க்கவியாக்க நூலில் கண்டு மகிழலாம். - (i) திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி: தமிழகக் குயில் திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் இன்னேசையின் மூலம் வடமொழி 271 தொல். பொருள். மரபியல்-நூற்பா, 99