பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


Ží கவர்ச்சியின் காரணமாக அந்த ஊரையும் அங்குள்ள மூர்த்தியையும் சற்று அதிகமாகவே அம் மறையோன் வருணித்திருத்தல் கூடும். மறையோன் மதுரைக்கு வழித் திறம் கூறும்பொழுதும் திருமால் குன்றத்றைக் குறிப் பிடுங்கால் தன் இறையன்பு மேலீட்டால் கேட்போர் திறம் நோக்காது ஆங்குள்ள வியத்தகு செய்திகளையெல் லாம் விரித்தோதுவதனைக் காணலாம். இங்ங்னம் கூறு வது இறையன்புடையாரின் இயல்பு என்பதைத் தெரி விக்கவே இளங்கோவடிகளும் அவன் பேசுமளவும் பேச விடுகின்றனர் என்று கருதலாம். எனவே, நேரில் கண்ட திருவரங்கத்தைக் குறைவாகவும் இன்னும் சென்று காணுத திருவேங்கடத்தை அதிகமாகவும் மறையோன் வருணித்துள்ளான் என்பதை மட்டிலும் காரணமாகக் கொண்டு திருவேங்கடத்தைப்பற்றிய வருணனை இடைச் செருகல் என்று பிள்ளையவர்கள் கூறுவது சிறிதும் பொருந்தாது என்பது என் கருத்தாகும். - தவிர, இன்னேர் உண்மையும் ஈண்டு அறிதற் பாலது. சிலப்பதிகாரம் வரலாற்று அடிப்படையில் அமைந்த காவியமாயினும் அஃது ஒரு வரலாற்று நூல் அன்று. கண்ணகி வரலாற்றைச் சாத்தனர் மூலம் அறிந்த இளங்கோவடிகள், மேலும் அவள் வரலாற்றைப் பலர் மூலம் நன்கு தெரிந்து தெளிந்து, தம் கற்பனை யையும் துணைக்கொண்டு காவியம் அமைத்தபொழுது எத்தனையோ செய்திகளை விட்டும் இருக்கலாம்; பல செய்திகளைக் கற்பனையாகச் சேர்த்துக்கொண்டும் இருக் கலாம். ஈண்டு நாம் காணும் இரண்டு இடவருணனை களும் மாங்காட்டு" மறையோனின் வாயில் வைத்துப் 20. மாங்காடு என்ற பகுதி மலைநாட்டில் (கேரளம்) உள்ளது. . -: х