பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


23 விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ அரிதே முஅைது முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னகின் ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.' (சிலைக்கும்-ஒலிக்கும்; நோன் ஞாண்-வலிய நாண், சிலை-வில்; அருநிறம்.அரிய மார்பு; கோடு.கொம்பு’ நறவு-கள்; அயரும்-சிறப்புச் செய்யும்; விழவு-திருவிழா; முஅைது-மிகப் பழைமை வாய்ந்த, முழவு உறழ்-முழ வினையொத்த, பொதினி - பழநி, ஒண்கேழ் - ஒளி விளங்கும்; ஆகம் - மார்பு, பழகுவாாதல் பயின்று தங்குதல். என்ற பகுதியிலுள்ள, 'விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ என்ற சொற்ருெடரை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முழுவதும் சமய சம்பந்தமான விழாக்கள் மலிந் தது வேங்கடம் என்று கூறுவர். இதல்ை அங்கு திருக் கோயில் இருந்தமை பெறப்படுகின்றது என்றும், அதனை மையமாகக் கொண்டு விழாக்கள் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்றும் ஊகம் செய்ய வழி அமைகிறதாகச் செப் புவர். ஆலுைம், இதனைக் கொண்டு கோயிலின் இருப்பைக் கொள்வதற்குச் சிறந்த ஆதாரம் ஆகாது என்பதனையும் ஒப்புக் கொள்வர்." மேற் குறிப்பிட்ட அய்யங்கார் அவர்களின் ஊகமான முடிவு தெளிவானதாகத் தோன்றவில்லை. சங்கப் பாடல்களே ஆழ்ந்து கற்போர் விழவினைக் குறிப் T 2. அகம்.எ, தலைமகன் பொருள் வயிற் பிரியவேறு பட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. :322. A History of Tirupathi—u%. 14.