பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


27 'விழவு அகலு ளாங்கண் சீறுர்," என்ற புறப்பாட்டுக் குறிப்பினேயும் காண்க. ஒவ்வோர் இல்லமும் விழவுடன் பொலிந்ததாகவும் குறிப்பு உள்ளது. "மாடங் தோறும் மைவிடை வீழ்ப்ப யோங்குக் கொண்ட விழவினும் பலவே." (மைவிடை-செம்மறிக் கிடா.) என்பதல்ை இதனை அறியலாம். இங்ங்னம் இல்லந் தோறும், ஊர்தோறும், நாடு முழுவதும் விழாக்கள் மலிந்திருந்த செய்தியைச் சங்கப் பாடல்களில் காணலாம். எனவே, விழாபற்றிய குறிப்பு வேங்கடத்திற்கு மட்டிலும் சிறப்பாக அமையவில்லை என்பதனை அறிய வேண்டும். அன்றியும், பேராசிரியர் அய்யங்கார் அவர் கள் காட்டிய பாடலில் இவ் விழாக்கள் சமயச் சார் புடையவை என்பதற்கு யாதொரு சான்றும் இருப்ப தாகத் தெரியவில்லை. ஆகவே, சங்க காலத்தில் சமயத் தின் அடிப்படையாகவோ வேறு காரணங் கருதியோ திருப்பதி பிரபலமடைந்திருந்தது என்பதற்கு நம்பக மான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. வேங்கடம்:-பெயர் விளக்கம்’ இனி, வேங்கடம்' என்ற சொல்லின் பொருளைக் காண்போம். வேங்கடம்’ என்ற கூட்டுச் சொல் (Compound word) வேம்', கடம் என்ற இரண்டு சொற் களாலாயது. வேம்-கடம்= வேங்கடம் என்ருயிற்று. "கடம் என்பது பாலை நி ல த் ைத க் குறிக்கும் சொல்லாகும். - 35. புறம்-65. 36. புறம்-34,