பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


4; அன்பர்களே, மேற்கூறிய மூன்று அரசர்களும் வேங்கடத்தை ஒருவர்பின் ஒருவராக ஆண்டனரா என்ப தன அறியக் கூடிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயின், இவர்கள் மூவரும் நீண்ட எல்லையாக இலங்கும் வேங்கடத்தின் வெவ்வேறு பகுதிகளே ஆண்டதாக அறியக் கிடக்கின்றது. ஒரு சில சங்கப் பாடல்களாலும் கல்வெட்டுக்ளாலும் மூவரில் ஒருவர் கிழக்குப் பகுதியை யும், மற்ருெருவர் மேற்குப் பகுதியையும், பிறிதொருவர் நடுப்பகுதியையும் ஆண்டதாகக் கருதலாம். இதனை மேலும் விளக்க முயல்கின்றேன், நுங்கன்' என்ற பெயரையும் பட்டத்தையும் உடைய அர ச ர் க ள் கிருஷ்ணை நதிக்கருகிலுள்ள பகுதியை பதின்ைகாவது, பதினைந்தாவது நூற்ருண்டுகள் வரையிலும் ஆண்டதாக அறிகின்ருேம். பதின்ைகாவது நூற்ருண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று நுங்கதே மகாராயர், நுங்கராயர் என்ற இரண்டு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. பதினைந்தாவது நூற்ருண்டைச் சார்ந்த மற்ருெரு கல் வெட்டு வீரதுங்கன் என்ற பெயருடைய அரசன் ஒருவன் தற்சமயம் பிரகாசம் மாவட்டத்தைச் சார்ந்த ஒங்கோல் வட்டத்திலுள்ள கனுபார்த்தியினே ஆண்டதாகக் குறிப் பிடுகின்றது." - அகநானூற்று பாடலால்" பவத்திரி என்னும் ஊர் கூடுருக்கருகிலுள்ளதாக அறியக்கிடக்கின்றது எனக் குறிப்பிட்டேன். மேலும், நெல்லூர் கல்வெட்டுக்களால்" பவத்திரி என்னும் ஊரைக் கடல் கொண்டது என்றும் 58. நெல்-கல்வெட்டு 0.55 பக்கம் 988-90. 59. புறம்- 89. அவ்வை சு. துரைசாமி பிள்ளை உரை காண்க. - 60. அகம்-340. 61. Nel. Ins, Gudur No. 88, 105,