பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


45 வண்டிகள் வித்தைகள் செய்வது போல் எழுந்தும் விழுந் தும் செல்லும் காட்சிகளைக் காணலாம். நாடு விடுதலை பெற்ற பிறகு சில பகுதிகளிலுள்ள இந்நெறிகளில் மண் சாலைகள் அமைக்கப் யெற்றுள்ளன. தொண்டையர் ஆட்சிக்குக் சீழிருந்த நாட்டுப் பகுதியும் மேற் கூறப்பெற்ற புல்லி ஆண்ட பகுதியை விடச் சிறந்திருக்கின்றது என்று சொல்லுவதற்கில்லை. இப்பகுதியைப்பற்றிய, 'நிழற்கவின் இழந்த நீரில் நீளிடை அழலவிர் அருஞ்சுரம் நெடிய வென்னர்' |கவின்-அழகிய நீர் இல்-நீர் இல்லாத, நீள் இடைநீண்ட இடம்; அழல்-நெருப்பு] என்ற அகநானுாற்று அடிகளால் இது நீரற்ற வறண்ட இடம் என்றும், மரநிழலின்றி நெருப்பைக் கக்குவதாக நீண்டு வளைந்த நெறிகளையுடையதாகவும் உள்ளது என்றும் அறிகின்ருேம். இன்ைெரு அகப் பாடலின், 'பயந்தலை பெயர்த்து மாதிரம் வெம்ப" (பயம்-நீர்; தலைபெயர்த்து-நீங்கி; மாதிரம்-திசை; வெம்ப-கொதிக்க) என்ற அடியால் அப் பகுதியின் எல்லாப் பக்கங்களிலும் நீர் வரண்டி வெப்பத்தால் கொதிக்கின்றது என்பது தெரிகின்றது. "விண்ணுற வோங்கிய பணியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறைஇறக் தவரோ சென்றனர்" 66. அகம்-213 67. அகம்-311. 68. அகம்-281.