பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


52 கணப்படி செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தில் செந் தமிழ் மொழி வழங்கி வந்தது. உரையாசிரியர்கள் இந்த நாடுகளின் பெயர்களையும் கூறியுள்ளனர். - தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன்வடக்கு-கன்ருய சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்.' என்ற பழைய வெண்பா ஒன்ருல் இப்பன்னிரண்டு பெயர்களையும் அறியலாம். இவற்றுள் குடநாடு என்ற பெயர் மேற்கு நாடு எனப் பொருள்தரும் தொட ராகும். கேரளமும் கர்நாடகமும் தமிழகத்தின் மேற்குத் திசையில் உள்ளவை. ஆகவே, குடநாடு என்பது இந்த இரண்டும் சேர்ந்த நாட்டையோ, அல்லது தனித் தனியாக இவற்றுள் ஒன்றையோ குறிப்பிடும் தொடர் என்ருகின்றது. எனவே, சேரர் குடநாட்டினின்றும் பிரித்தறிவதற்காகவே எருமை குடநாடு’ என்ற தொடர் வழங்கப்பெற்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திலேயே மைசூர் பன்னிரு நாடுகளில் ஒன்ருக அமைந்து தமிழ் வழக்கும் பெற்றது. இக்காலத்தில் இங்கும் கேரளத்திலும் செந் தமிழ் பயின்று வந்தது. சங்க காலத்திலும்கூட மைசூர்ப் பகுதியில் செந்தமிழ் வழங்கலாயிற்று என்ற உண்மை இந்நாட்டைப்பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் சேர்க்கப் பெற்றமையால் அறியக் கிடக்கின்றது. புற நானுாற்றுப் பாடல்களும் (எண் 273, 303) அகநானூற் றுப் பாடலும் (எண் 73) எருமை. வெளியனராலும், இன்னெரு புறநானுாற்றுப் பாடல் (எண் 72) அவர் திருக் குமாரர் எருமை வெளியனர் மகனர் கடலனர் என்பவ 82. நன்னூல் விருத்தியுரை-நூற்பா 273இன் உரை