பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


57 அடைந்தவர்களுடைய பாவம் அனைத்தையும் ஒழிப் பதல்ை இத் திவ்விய தேசத்தை வேங்கடம்’ எனக் கூறத் தொடங்கினர். அவர்கள் காலத்திற்குப் பிறகு வேம்’ என்ற சொல், எரித்தல் என்ற பொருளைக் கொண்டிருந்த மரபு மறைந்து, வேம்' என்ற சொல் 'பாவம்' என்ற பொருளை ஏற்றது. பக்தி இயக்கம் ஓங்கி யிருந்த காலத்தில் சமயக் கருத்துகளும் தத்துவக் கருத் துகளும் மக்கள் மனத்தில் நுழையத் தொடங்கி, அதனல் அவர்கள் மனநிலை விரிந்த காலத்தில், மனித மனம் ஏற்கெனவே தான் படைத்த சொல்லுக்குப் புதுப் பொருளையும் சேர்க்கத் தொடங்கியது. பாவமும் ஆன்மாவுக்குத் தாங்கமுடியாத வெப்பத்தைத் தருவ தாகும் என்று மனம் கற்பிக்கத் தொடங்கியது. எனவே, 'வேம்’ என்ற சொல், பாவம்' என்ற பொருளையும் ஏற்க வேண்டியதாயிற்று. அங்ங்னமே, கடம்’ என்ற சொல்லும் புதுப்பொருளை ஏற்றது. கடம் என்ற சொல் சங்ககாலத்தில் பாலை நிலத்தைக் குறிக்கும் சொல்லாக வழங்கியதை முன்பொழிவில் கூறினேன். உரையாசிரி யர்கள் அதற்கு, அருஞ்சுரம் என்று பொருள் வழங்கி யதையும் சுட்டிக் காட்டினேன். இடைக்காலத்தில் “கடம்’ என்ற சொல் எரித்தல்’ என்ற பொருளை ஏற்றது. வேங்கடம்' என்ற கூட்டுச்சொல் பாவங்களே. எரித்தல்’ என்ற பொருளில் வழங்கி, மேலும் அது "பாவங்களை எரிக்கும் இடம்' என்றும் வழங்கத் தொடங் கியது. சங்க காலத்தில் இயற்பெயராக வழங்கிய வேங்கடம் இடைக்காலத்தில் காரணப்பெயராக மாறத் தொடங்கியது : ஆழ்வார் பாடலிலும் இப் பெயராகவே ஏறிவிட்டது நம் போன்று படித்தவர்கள் இச்சொல் லாராய்ச்சியில் ஈடுபட்டுத் தலையை உடைத்துக் கொள்ளு கின்ருேம். ஆல்ை, நாடோறும் பல்லாயிரக்கணக்கில்