பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


58 யாத்திரையாகத் திருப்பதிக்கு வரும் பக்தர்கள்-படி தி தவர்கள், பாமர மக்கள் உட்பட-அனைத்தையும் மறந்து வேங்கடத்தைத் தமது பாவங்களையெல்லாம் தீயினில் தாசாக எரிக்கும் இடமாகவே கருதுகின்றனர். இன்னும் சிலர் வேங்கடம் என்ற திவ்விய தேசம் அழிவில்லாத ஐகவரியங்களை அளிக்கும் இடமாகும் எனவும் கருதுகின் றனர். வேண்டுவார்க்கு வேண்டுபவற்றைத் தரும் 'கலியுக வரதன் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கருதும் மனங்கட்குச் சொற்களுக்குப் புதிய பொருளைச் சேர்த்துக் கொள்வதில் ஒரு சிரமமும் இருக்க முடியாதல்லவா? எனவே, இவர்கள் கருத்திற்கு ஏற்ப வேம்’ என்பது அழிவின்மை, கடம் என்பது ஐசுவரியம் என்றபொருள் வழங்கத் தொடங்கிற்று. தன்னை அடைந்தார்க்கு அழிவில்லாத ஐசுவரியங்களைத் தருதலால் இந்தத் திவ்விய தேசம் வேங்கடம் என்று பெயர் பெற்றதாக இவர்கள் மனம் எண்ணுவதில் வியப்பொன்றும் இல்லை. இத்தகைய பக்தர்கள்-சைவர்கள் வைணவர்கள் உட்பட எல்லோரும்-மனத்திற்குகந்த பக்தி அவியல்' பாடலும் எழுந்தது. "திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொற் கேளாக் காது புரப்பவர் தங்கள் கண்ண்ர் பொழிதரச் சாகாத் தேகம் இருப்பினும் பயனென்? காட்டில் எரிப்பினும் இல்ல் தானே." 3. இது வராக புராண விளக்கம் স্তন্তম 4. விவேக சிந்தாமணி +