பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


#4 இரண்டாவது காரணம்: அகநானூற்றுப் பாடலடியிலுள்ள நெடியோன்' என்ற சொல் முருகனக் குறிப்பது என்பது உண்மை என்பதற்குத் தட்டில்லை. இங்ங்னம் அருகிக் காணப் பெறும் வழக்கு திருமாலுக்குப் பெருகி வழங்கும் வழக்காக இருப்பது சிந்திக்கத்தக்கது. அன்பர்களே, நெடியோன்’ என்பது, உயர்ந்தோன்’ என்ற பொரு ளுடையது. இச் சொல் மற்றத் தெய்வங்கட்கும் அரசர்க்கும் வழங்கும் பொதுச்சொல்லாகும். அங்ங்னம் வழங்கும்போது, அது அடையுடனவது முன் தொடர்ச்சி பற்றியாவது அவர்களுள் ஒருவரைக் குறிக்குமேயன்றித் தனித்து நின்ற நிலையில் அங்ங்னம் அவர்களைக் குறிக்கும் ஆற்றலுடையதன்று. 'முந்நீர் விழவின் நெடியோன்' "தேர்வி சிருக்கை நெடியோன்' "பொலந்தார் மார்பின் நெடியோன்' "நிலந்தரு திருவின் நெடியோன்' என்று பாண்டியனையும், பாரி போன்ற அரசர்களையும் அடையுடன் நெடியோன் என்ற சொல்லால் பண்டை நூல்கள் கூறுவதைக் காணலாம். அங்ங்னமே, 'மஞ்ஞை வெல்கொடியுயரிய...... நெடியோன்' என்றும், "படுமணியான நெடியோய்' எ ன் றும் அடை யுடனும், "நெடியாய் நின் குன்றின் மிசை' என்று முன் தொடர்பு பற்றியும் கூறுவது பண்டைய வழக்கே என்பது ஈண்டு அறியத்தக்கது. ஆல்ை, திருமாலைக் 22. H/Dib-9. 26. அகம்-149 23. புறம்-114. 27. பரிபா.19 வரி 28 24. மதுரைக் காஞ்சி-வரி 61. 28. பரிபா.19 வரி 84 25. சிலப் 28-வரி 4, • *- :