பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் 15 49. 51. 53. 49. 50. 51. 52. 53. வெதிரே தருதி யெனவென் வினையால் எதிரே யெரிவேன் மிசைநின் னருளென் அதிரேர் மழையைப் பொழியா யறிவுக் கதிரே திருவேங் கடமா யவனே. உறவா யெனது ன் ளமுளா யதனால் மறவே னுனையான் மரணப் பொழுதும் அற வான் பெறுகன் றனையே னமுதம் கறவாய் திருவேங் கடமா யவனே. தடிடோ லடிவீழ்ந் துசெயஞ் சலியே அடியே னது.கைம் முதலந் நியமில் நெடியா யளியே னு நினா துடைமை கடியேல் திருவேங் கடமா யவனே. அரிதா கியதுன் கையினென் கையினுக் குரிதா கியதஞ் சலியொன் றுமதைப் பிரியா துரமாய்ப் புரிவேன் பிறிதில் கரியாய் திருவேங் கடமா யவனே. தாயே தெரியா துதனைத் தெரியா தோயா தழல்கேட் டொருதன் மகவை ஆயேந் துவள்போந் தெனையேந் துகநீ காயேல் திருவேங் கடமா யவனே. வெதிர் - மூங்கில்; அதிர் - முழங்கும். ஆன் - பசு. தடி - தண்டம்; அஞ்சலி - வணக்கம்; அந்நியம் - வேறு; உடைமை - உடைமைப்பொருள் கடியேல் - நீக்காதே. உரமாய் - வலிமையாய், உறுதியாய். ஓயாது - ஒழியாது; மகவு - குழந்தை ஆய்- தாய்: காயேல் - சினவாதே.