பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 44. 45. 46. 47. 48. திருவேங்கட மாயோன் மாலை தேவே திருநா பிசெறிந் துமுனம் பூவா தொளிர் வீ டுபுகப் புரியாய் கோவே பவமா கியகோ டையிலாக் காவே திருவேங் கடமா யவனே. பரந்தார் முலைபால் வழியப் பருகாத் தரஞ்சே யறிந்தாட் டுவள்தா யலளோ நிரந்தா ரருள்பா யவுநீ யெவனுங் கரந்தாய் திருவேங் கடமா யவனே. தோண்மே லுள தொன் றைமறந் துதுரீஇச் சேனே திரியுஞ் சிதடன் சிவன வினே யலைகிற் பலென்மெய் யுளுனைக் காணேன் திருவேங் கடமா யவனே. சொற்கீ ரமதொத் தறமோ துவல்யான் அற்கீ றொளியா யறமா யினையென் றெற்கீ துணர் கில் லெனையுய் நெறியுய் கற்கீ திருவேங் கடமா யவனே. ஏத்தார் நினையெங் கணிருந் தவரோ நீத்தாழி நிமிர்ந்து விண்ணின் றபொழு தாத்தா வுயிர்யா வும்வயிற் றடையக் காத்தாய் திருவேங் கடமா யவனே. 44. 45. 46. 47. 48. நாபி - கொப்பூழ், கா - சோலை. சேய் - குழந்தை; எவனும் - எல்லா இடத்தும்: கரந்தாய் - மறைந்துள்ளாய். சிதடன் - அறிவிலி: சிவன - ஒப்ப, அற்கீறொளி இரவைப் பிளக்கும் ஒளி. ஏத்தார் - துதியார் : ஆழி நிமிர்ந்து - கடல் பொங்கி: ஆத்தா - ஆற்றா. - n