பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை பரதகண்டத்துக்கு இருபெரு வரம்பாயுள்ளவை சேதுவும் இமயமும் என்டர். ஆலேது ஹிமாசல பர் யந்தம்' என்பது வழக்கு. இப் பரத கண்டத்தை வட நாடு தென்னாடு என் இரண்டாகப் பகுத்து இடை நின்று விளங்குவது திருவேங்கடம் என்னும் தெய்வமலை. திருவேங்கடத்துக்கு வடக்கில் உள்ள மக்கள் வழங்குவது ஆரியம் வடமொழி, தெற்கு உள்ள மக்கள் வழங்குவது தமிழ் - தென் மொழி எனப்ப்டும். வடசொற்கும் தென்சொற்கும் வரம்புஆகி நான்மறையும், மற்றை நூலும், இடை சொற்ற் பொருட்கு எல்லாம் எல்லை.ஆய், நல் அறிவுக்கு ஈறுஆய், வேறு புடை சுற்றும் துணைஇன்றி, புகழ்பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற அடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ என்று கம்பரும் வடசொற்கும் தென்சொற்கும் எல்லை யாய் இலங்குவது திருவேங்கட்ம் என்கிறார். -- சங்கப் பாடலில் வேங்கடத்துக்கு அப்பால் வேற்று மொழி வழங்குவதாக வேங்கடத்து உம்பர் மொழி பெயர் தேள்ம்' என வருவது கவனிக்கத் தக்கது. இளங்கோவடிகள் திருவேங்கடத்தில் திருமாலின் - * -- * ** انٹینا“۔ நின்ற வண்டைத்தை பின்வருமாறு சித்திரிக்கின்றார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சிமீமிசைவிரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்குவில் பூண்டு, நல்நிற மேகம் நின்றது போலபகை அணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணம் -சிலப், காடுகாண் 41-52