பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலே திருமால் அருள்பாலிக்கும் திருப்பதிகள் எல்லாவற்றையும் பற்றிய பக்திப் பாடல்கள் பலவாக உள்ளன. ஆழ்வார்களுள் தொண்டரடிப் பொடியாழ்வாரைத் தவிர ப்ெரியாழ்விார் முதலாயினார் எல்லாரும் திருவேங்கடத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர். திருவேங்கடத்தைக் குறித்த பாசுரங்கள் 202 காணப்படுகிறது; பின்னால் வந்த புலவர் பலர் திருவேங்கடத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ள னர். சிறப்பாக அழகிய மணவாள நாசர் என்னும் பிள்ளைப் பெருமாளையங்கார், 'திருவேங்கடத்து மாலை', திருவேங்கடத்து அந்தாதி என இரு பிரபந்தங் கள் தந்துள்ளார். --- இந்த வரிசையில் வைத்துப்_போற்றத் தக்க பக்திப் பனுவல் மகாவித்துவான ரா. இராகவையங்கார் பாடிய திருவேங்கட மாயோன் மாலை. பாடல்கள் எல்லாம் 'திருவேங் கடமா யவனே' என்னும் விளியை இறுதியில் கொண்டு அமைந்துள்ளன. வேங்கட மாயோனை விளித்து கவிஞர் பல்வகை முறையீடுகளைத் தெரிவிக் கிறார். இந்நூலுடன் இயைபுடைய திருவேங்கட சோதி, திரும்ாலிருஞ்சோல்ை மலையழகர் தாழிசை மாலை, திருமந்திரப் பாடல், நூற்றெட்டுத் ಶ್ಗ குறிக்கும் பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ம்irயோன் மாலைக்கு என்னால் எழுதப் பெற்ற குறிப்புரை யும் அடிக் குறிப்பாகத் தரப்பட்டுள்ளது. பாடல் முதற்குறிப்பு அகராதியும் நூலிறுதியில் இடம் பெற்றுளளது . மூலப்படிகளை 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பாதுகாத்து வந்த மகாவித்துவானின் குடும்பத்தாருக்கும், குறிப்பாக இப்பொழுது இந்நூல் வெளியீட்டிற்கு உதவிய ம்காவித்துவான் பெயரர் பம்பாய் டாடா ஆராய்ச்சிக் கழகப் பேராசிரியர் டாக்டர் ரா. விஜயராகவன்- அவர் களுக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். முத்ன் முறையாக மூலப்படியிலிருந்து எடுத்து வெளியிடப் பெறும் இப்நூலைத் தமிழுலகம் பெற்றுப் பயன் பெறுவதாக. கவிமணி நிலையம் . சண்முகம் பிள்ளை 29 - 3 - 96 } ☾ (Ք