பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கட மாயோன் மாலை காப்பு வேதமோ தாதிமால் வேங்கடச் சோதிமேல் காதல்கூர் மாலையிற் கவன் புகழ் கமழ்பெயர்ப் போதெலா முண்டுநா ருண்டியான் புனையவோ கோதையார் துணையுமுண் டாதலிற் கூடுமால். நூல் 1. உடலோ வுயிரோ வெனவே றுணரா தடலே புரிவே னுனையே தொழுதேன் விடலோ கொளலோ விழைவாய் கருணைக் கடலே திருவேங் கடமா யவனே. 2. உணவான் வருவே தனையோ வொழியேன் மணவாளியின்வே தனையான் மருள்வேன் தணவா விவைதீர் தருவாய் மலராள் கணவா திருவேங் கடமா யவனே. காப்பு : காதல்-அன்பு, பக்தி; பெயர்ப்போது-பெயராகிய

  • -- F. H * மலர், திருநாம மாலை; கோதையார்-பூரீஆண்டாள். 1. அடலே புரிவேன் - வலிமை காட்டுவேன்; விழைவாய்

விரும்புவாய். 2. வேதனை - துன்பம், மணவஈளி மணமுள்ள மலரம்பு களையுடைய மன்மதன்; மருள்வேன் - மயங்குவேன்; தணவா - நீங்காத; மலராள் - தாமரைப் பூவில் வீற் றிருக்கும் திருமகள். தி.-1