பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 7 திருவேங்கட மாயோன் மாலை அண்ணான் முனநீ தருமாக் கையினாற் பண்ணா தனதீ மைகள் பண் ணியுனை எண்ணா வெனையு மிறையெண் ணுவையோ கண்ணா திருவேங் கடமா யவனே. விண்ணே செலினுந் நரகே விழினும் மண்ணே புகினு முனதாண் மறவா எண்ணே தருவா யிமையோ ருலகோர் கண்ணே திருவேங் கடமா யவனே. என்றே யுளை நீ யுளனன் றளியேன் நன்றே புரியே னெனின்யார் நவையோ மின்றே வகியார் விழையும் மரியின் கன்றே திருவேங் கடமா யவனே. வேரே தலையே தெரியா வினையை ஆரே அரிவா ருனதன் பிலர்தாம் பாரே ழொருபோ னகமே பருகும் காரே திருவேங் கடமா யவனே. தாளா லுலகியா வையுந்தா வியபோ தாளா யினனோ வலனே வெனை நீ வாள விடுதன் முறையோ மறைசொல் காளாய் திருவேங் கடமா யவனே. - அண்ணால் - தலைவனே இறை - சிறிது. விண் - வானுலகம், மோட்ச உலகம்; எண்-எண்ணம்; I - - * இமையோர்- தேவர். உளை-உள்ளாய்; அளியேன் - இரங்கத்தக்கேன். நவையே - குற்றமோ தேவகியார் - கண்ணனின் ஈன்ற தாய். ஆரே- யாரே, வினை - வினையாகிய மரம்; உருவ கம்; போனகம் - உணவு; காரே - மேகவண்ணனே. தாவி யபோது ஆளாயினனோ என்க. போது - பொழுது வாளர்விடுதல் - வீணாகவிடுதல்.