பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

சமரச நோக்கில் வாழ்ந்து காட்டியோர்

பெரிய புராணம்

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி, கால சுழற்சியில் சூழ்நிலையில் ஏற்பட்ட ஒரு சில மாறுதல்களைஒட்டியோ அல்லது வெட்டியோ, மக்கள், இலக்கியம் மூலம் அந்நிகழ்ச்சிகளுக்குச் சவால் விடுவர். இது பொய்யல்ல; மெய், மெய்! !

குலோத்துங்கன் காலத்து ஆட்சியிலே மக்களிடை ஏற்பட்ட அமைதியின்மையே கம்பராமாயணத்திற்குத் தூண்டுகோலாகியது. மேல் நாட்டிலே சர்ஜான் மூரின் உத்தோபியா (Utopia) என்ற நூல் வெளிவந்ததே, ஏன்? அரசாட்சியில் ஏற்பட்ட அதிருப்தியே அதற்குக் காரணம், இப்படியே சொல்லிக் கொண்டே போனால் பக்கங்கள் நிறையும்.

இந்தியாவில் புராணங்கள் ஏன் எழுதப்பட்டன?* வரலாற்றின் ஏடுகளைப் புரட்டுவோம். இந்தியாவில் இந்து பெளத்தம் சமண மதங்களே ஆதியில் இருந்தன என்பது புலனாகும். இந்த மதங்களில் ஆதிமதம் இந்து மதம். இந்து

  • முருகன் அல்லது அழகு, பக். 100.

87