பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைராக்கியம் முற்றுப் பெறு மட்டும் உயிரையும் மதியாது உழைத்தனர்.

அறவொழுக்கம் பேணினர். பிற உயிர்க்குந் தீங்கு செய்யாது தியாகத்துக்கு உட்படுவதே அறவொழுக்கம். பிறர்க்குத் தீங்கு செய்ய ஒருவர் வாழ்வது அறநெறியல்ல.

நாயன்மார் வரலாற்றைப் படித்தால், அவர் போன்று ஒழுக்கமாக வாழ முடியும். அவ்வாறு வாழ்ந்தால், தானே மன உறுதி உண்டாகும். மன உறுதி வந்தால் உண்மையாகப் போராட அஞ்சாமை தானே வரும். அஞ்சாமையிலிருந்து

வீரம் பிறக்கும் என்கிறார் திரு.வி.க.

நாயன்மார் சாதிகள்

பெயர் சாதி

1. சுந்தரமூர்த்தி நாயனார் ஆதிசைவம் 2. மெய்ப்பொருள் நாயனார் வேந்தபெருமான் 3. திருநீலகண்டர் குயவர் 4. இயற்பரை நாயனார் வணிகர் 5. இளையான்குடி மாறனார் வேளாளர் 6. அமர்நீதி நாயகர் வணிகர் 7. விறன் மீண்ட நாயனார் வேளான் 8. ஏனாதி நாத நாயனார் ஈழுகுலசான்றோர் 9. கண்ணப்பர் வேடர் 10. குங்குலியக் கலய நாயனார் மறையவர் 11. மாவக்கஞ்சாற நாயனார் வேளாளர் 12. அரிவாட்டாய நாயனார் வேளான் 13. ஆனாய நாயனார் ஆயர்குலம் 14. மூர்த்தி நாயனார் வே தியர் 15. உருத்திர பசுபதி நாயனார் அந்தணர்

102