பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்றோர் வற்புறுத்தினர். திரு.வி.க அதற்கு இணங்கியே தீர வேண்டியிருந்தது.

மணிவிழா பற்றிய முழக்கம் பத்திரிகைகளை நிரப்பின.

திரு. வி. கவின் மனநிலை யாது? ‘அம்முழக்கம் என் மண்டையைக் குடைந்தது’* என்கிறார் இராயப்பேட்டை முனிவர்.

இது போன்று எந்தவித விளம்பரமும் வேண்டாம் என்று சொல்கிறவர், எத்தனை பேர்! எந்தவித வசதியும் வேண்டாம் என்று ஒதுக்கியவர் எத்தனை பேர்! வறிய நிலையிலும் பணம் வேண்டாம்!’ என்று உதறிய பெருந்தகையோர் எத்தனை, எத்தனை!

இவைகளைச் செய்யக் கூடியவர்க்கு நெஞ்சுரம் தேவை: பற்றின்மை தேவை; தன்னடக்கம் தேவை. இவையனைத்தும் பெற்ற ஒரே மனிதகுல மாணிக்கம் திரு. வி. க.

குணம் காடி குற்றம் காடி...

திரு. வி. க கொள்ளையளவில் ஈவேராவுக்கு மாறு பட்டவர். இந்த கொள்கைப் போர் இருவர் பத்திரிகை களிலும் நடந்தன. இரண்டும் தீப்பொறி கக்கும்; நாயக்கர் சீறி சீறி விழுவார்; திரு.வி கவோ தம் பத்திரிகையில் பதிலடி கொடுப்பார்.”*

இக்கொள்கை வேற்றுமை திரு.வி.கவின் சமநோக்கை பாதிக்கவே இல்லை. ஈவேரா பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால், அவர்தம் அரிய குண நலன்களை அறிய வேண்டும் என்றால் திரு. வி. கவின் வாழ்க்கைக் குறிப்பை ஊன்றிப் படிக்க வேண்டும் அதில் பெரியார் பற்றி நாம் அறியும் புதிய செய்திகள் தான் எத்தனை எத்தனை!!

  • முன் குறிப்பிட்ட நூல், பக். 973. * குடியரசு தாக்கல், பக். 388-வாழ்க்கைக் குறிப்பு 1.

வாழ்க்கைக் குறிப்பு 1, பக். 434.

1 19