பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி ஜலஜா சக்திதாசனிடம் ‘அந்த நூலை முடித்தே ஆக வேண்டும். அதுவும் நன்றாக எழுத வேண்டும்’ என்று கூறினேன். அவளும் எனக்கு ‘முடித்தே தீருவோம்’ என்று வாக்குக் கொடுத்தாள். அவளது உறுதி எனக்கு அமைதியைத் தந்தது.

சக்திதாசன் சுப்பிரமணியன் (1983)


என் கணவர் திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் அமர ரானார்.

அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்கு ஊக்கம் அளித்தவர் பலர்.

இது என் கன்னி நூல் அல்ல. என் கணவர் எழுதிய பல நூல்களிலும் நான் எழுதிய பல பகுதிகளுண்டு.

என் திருமணத்திற்கு முன்னரே எனக்கு திரு.வி.கவின் நூல்களில் ஈடுபாடு உண்டு. அதனை ஏற்படுத்தியவர் என் தமிழ் பேராசிரியர் அமரர் திரு. ச. கு. கணபதி அய்யர் அவர்கள்.

திரு. வி. கவின் தலைமைச் சொற்பொழிவு, கலாக்ஷேத் திரத்தில் எங்கள் தமிழ் அன்பர் கழகம்’ என்ற அமைப்பின் ஆண்டு விழாவில் நிகழ்ந்தது. ஈடுபாடு மிகுந்தது.

திரு.வி.கவின் மாணவர் எனக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணவர் என்றறிந்ததும் மறுப்பே கூறவில்லை. என் கணவர் திரு. சக்திதாசன் சுப்பிரமணியனும், ஆசிரியர் போன்றேஅவர் கூறிய அந்தணராக இருந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி.

அவர் என் தெய்வம், என் தெய்வத்தை உருவாக்கிய ஆதி இறைக்கு செய்யும் ஒரு தெய்வீகப் பணியாகக் கருதி இந்நூலை நான் முற்றுப் பெறச் செய்கிறேன்.

அறிஞர்கள் ஆதரவும் அன்பும் வேண்டுகிறேன்.

ஜலஜா சக்திதாசன் )கப்பிரமணியன்( 1984 - 4 .3