பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய நிலைமையை நேரில் கண்டு அறிய இந்திய அமைச்சர் திரு. மாண்டேகு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டார்.

முப்பத்திரண்டாவது காங்கிரஸ் தீர்மானங்கள்

கல்கத்தாவில் முப்பத்திரண்டாவது காங்கிரஸ் அன்னி பெஸன்ட் அம்மையார் தலைமையில் கூடிற்று. பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன, அவைகளுள் பொறுப்பாட்சி தீர்மானம் முக்கியத்துவம் பெற்றாலும், அதைவிட அதிகமுக்கியத்துவம் பெற்றது அலி சகோதரர்கள் விடுதலை தீர்மானமே. இந்து, முஸ்லீம்-பகை உண்டோ? இது அதன் அறிகுறியோ.

ரெளலட் சட்டம்

1918-ஒரு முக்கியமான ஆண்டு, இந்திய வரலாற்றில் முக்கியமான ஆண்டு. மாண்டேகு அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையை ஒட்டி இந்திய அரசியல் சீர்திருத்தச் சட்டம் உருப்பெறத் தருணம் வந்தது! இவ்வாறு அனைவரும் எண்ணினர். ஆனால் ஏமாந்தனர். ஏன்? ஐரோப்பா யுத்தத்தில் பிரிட்டனுக்கு பொன்னையும் உயிரையும் வாரி வழங்கிய இந்தியாவின் உதவியை பிரிட்டன் மறந்தது: நம் நாட்டை ஒறுக்க உளங்கொண்டது, சதி செய்தது. நாட்டில் மூர்க்கத்தனம் அராஜகம் இருப்பதாக ஒரு வதந்தியைக் கிளப்பியது. இதன் உண்மையை ஆராய டையர் என்பவரை தலைவராகக் கொண்ட ஒரு குழுவை அனுப்பியதாக ஒரு நாடகமாடியது. விளைவு?

இந்திய சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வரப் பட்டது. சட்ட சபை மசோதாவை அங்கீகரிக்க மறுத்தது! நாடே மறுத்தது, ஆனால் மசோதா நிறைவேறியது. பலாத்காரமாக நிறைவேற்றப்பட்டது என்பதே அப்பட்ட மான உண்மை.

159