பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தொழிலாளர் சங்கம், கதவடைப்போ வேலை நிறுத்தமோ நிகழ்த்திடின், அந்நிகழ்ச்சியில் எல்லா சங்கங் களும் அனுதாபங் கொண்டு உழைப்பர். அது மட்டுமா? பொது வேலை நிறுத்தமும் செய்யத் தயாராக அனைவரும் இருந்தால், எல்லாருக்கும் கிலி ஏற்படுவது சகஜந்தானே?

அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? லார்ட் வில்லிங்டன் தொழிலாளர் சட்டாமொன்று செய்யப் புறப்பட்டார். ‘லார்ட் பெண்ட்லண்ட் எச்சரிக்கை முதல் பாணம்: லார்ட் வில்லிங்டன் எச்சரிக்கை இரண்டாவது பாணம்; சட்ட நடிப்பு மூன்றாவது பாணம்; தொழிலாளர் எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும்’ என திரு வி.க. சொல்லி வந்தார்.

லார்ட் வில்லிங்டன் சட்டம் செய்வதற்கு முன்னர் ஒரு விசாரணை கூட்டம் அமைத்தார், அக்கூட்டத்தின் தலைவர் ஜஸ்டிஸ் குமாரசாமி சாஸ்திரியார். இவரே ரெளலட் சட்ட விசாரணைக் குழுவில் இருந்தவர். அந்த விசாரணையில் ஒருவித மறுப்பும் கூறாதவர்: வாய்மூடி மெளனியாய் மற்றவருடன் கலந்து அறிக்கையில் கைச் சாந்துமிட்டவர்.

தொழிலாளர் ரெளலட் சட்டம் பற்றி அறிந்திருந்தனர்” சாஸ்திரியார் பற்றியும் தன்கு அறிந்தவரே.

‘ரெளலட் சாஸ்திரி வேண்டாம்!” என்ற கூக்குரலை தொழிற்சங்கங்கள் எழுப்பின. இக்கூக்குரல் எவ்வித கலகத்தையும் ஏற்படுத்தவில்லை.

மத்திய சங்கம் விசாரணைக் குழுவில் பிரதிநிதித்துவம் கேட்டது.

லார்ட் வில்லிங்டன் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். பிரதிநிதிகள் சென்றனர். ஆனால் அவர் தொழிலாளர்களிடமே பேசினார். ஒரே ஒரு தொழிற்சங்சத் தலைவர் சாஸ்திரியின் தலைமைக்கு ஒப்புதல் தெரிவித்தார். மற்றவை எதிர்த்தன.

  • இந்தியாவும் விடுதலையும், பக். 356.

17 I