பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்கள் முன்னேறியுள்ளன. நாகரீகமும் முற்றியுள்ளது. மேல் நாட்டு நாகரீகம் நம் நாட்டில் ஊடுருவி உள்ளது. ஆனால் பெண்கள் நிலையோ? சிந்தியுங்கள்!

‘மறுமணம் விதவைத் திருமணம் ஏற்றம் கண்டுள் ளதா? விதவைத் திருமணம் செய்து கொண்ட பெண்களை சமூகம் எந்த நோக்குடன் பார்க்கிறது. நன் முறையில் ஏற்கிறதா?

மணவிலக்கு ஒன்று நடந்துவிட்டால், யாரைக் குறை கூறுகிறது சமூகம்? பெண்ணை: பெண்ணே அதற்குக் காரணம் என்று முடிவு கட்டுவது முறையோ? இல் வாழ்க்கையில் ஆணுக்கு பங்கேயில்லையோ? அறிந்தும், தெரிந்தும் உண்மையை ஏற்க மறுப்பது நீதியோ, முறையோ?

‘உரிமையில் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு’ என்பதில்லை. கட்டுப்பாட்டுக்கு, ‘ஆண் அடங்கி நடத்தல் வேண்டுவதில்லை; பெண் மட்டும் அடங்கி நடத்தல் வேண்டும் என்றும் நியதி இயற்கையில் இல்லை.”*

பெண் என்னும் இறை வாழ்க.

பெண்மைத் தெய்வம்

‘பெண் மகளாகத் தோன்றினாள், மனைவியாக வாழ்ந்தாள். தாயாக தொண்டு செய்தாள். இப்போதுத் தெய்வமாகக் காட்சி அளிக்கிறாள். உலகீர்! அக்காட்சி காண்மின். தெய்வம், தெய்வம் என்று எங்கு ஒடுகிறீர்? நூற்களை ஏன் ஆராய்கிறீர்!

இதோ தெய்வம்: பெண் தெய்வம்; காணுங்கள்; வழி படுங்கள்!’ என்றே அழைக்கிறார் திரு. வி. க அனை வரையும்.

  • வாழ்க்கைத் துணை, பக். 291
  • பெண்ணின் பெருமை, பக். 308.