பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கத்திற்குப் பொருத்தமான இந்திய சொற்றொடர் காண்போருக்குப் பரிசு தருவதாக அறிவித்தது.

மகன்லால் காந்தி ‘சதாக்கிரகம்’ என்னும் சொற்றொடர் கண்டு, பரிசும் பெற்றார்.அச்சொற்றொடர் தெளிந்த பொருள் நல்குமாறு காந்தியடிகள் ‘சத்தியாக் கிரகம்’ என்று மாற்றினார். இதுவே சத்தியாக்கிரகம்’ சொல் உருவான வரலாறு.

சத்தியாக்கிரகம் புதியதல்ல. ஆனால் சொல் தான் புதிது. இது, தற்காலத்திற்கேற்றபடி சுதேசியத்தினின்று வழுவி அல்லல்படும் உயிர்களை அன்பால் அணைத்து, திருத்தும்: பின் உ ண் ைம ய ர ன தன் வழிக்கு திருப்பும் முறையே சத்தியாக்கிரகம் என்றால் அது மிகையன்று.

இதற்குத் தேவை எவை? உண்மை அன்பு, அஞ்சாமை அருள், அகிம்சை-இவைகளே சத்தியாக்கிரகத்தின் வேர்.

ஆக சத்தியாக்கிரகி யார்? சில சிறப்பியல்புகள் கொண்டவன். அவனுக்குச் சில கோட்பாடுகள் உண்டு. ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்வான்.”

பகைவனுக் கருள்வான் பண்புடையவன்.

‘வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தைக் காட்டு’ என்ற இயேசு பிரானின் பொறுமையைக் கடைப் பிடிப்பவன்.

‘பொய்மைக்கு பொய்மை; பொறாமைக்குப் பொறாமை; கொலைக்குக் கொலை’ என்ற விலங்குணர்வை அடக்கு; ஆற்றிவினால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்து; துராக்கிரகத் திற்கு பணியாது எதிர்ப்பு காட்டு; ஆனால் அன்பு வழியில்; அகிம்சைப் பாதையில் பொறுமையே அணியாய் கொண்டு எதிர்த்துப் போராடு; இதுவே சத்தியாக்கிரகம்’ என்கிறார் அண்ணல் தம் விளக்கத்தில்.

206