பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பொருளும் அருளும் அல்லது மார்க்ளியமும்

காந்தியமும் 13. சித்தந் திருந்தல் அல்லது செத்து பிறத்தல் 14. முதுமை உளறல் 15. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல். ‘உரை நடை இருக்கட்டும். அவர் செய்யும் தொண்டு எத்தகையது? பற்பல தொல்லைகளினுள்டே அவர் தொடக் கத்தில் உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்’ என்று சிறு செய்யுளை வெளியிட்டார். இது செப்டம்பர் 1931. பின்னர் வேட்டல் தொடர்ச்சியில்-முருகன் அருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், பொதுமை வேட்டல் என்ற செய்யுள் நூல்கள் வெளியாயின. 1945 முதல் வெளியான நூல்களில் தமிழ்க்கலைத் தவிர ஏனையன செய்யுள் நூல்களே. அவரது கடைசி நூல் வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்.’

இவற்றில் ஒளி வீசுவது திரு.வி.கவின் சமரச சன்மார்க்கக் கருத்துக்கள். இந்நூல்களில் இயற்கையன்னை தாண்டவ மாடுகிறாள்; கற்பனை துள்ளுகிறது; உணர்ச்சிகள் அலை பாய்கின்றன. பொதுமை வேட்டலில் சமரச சன்மார்க்கக் கொள்கைகள் இடம் பெறுகின்றன. இங்கு முக்கியமாக இயற்கை வாழ்வு, மனத்தின் இயல்பு, அருளின் பெருமை* ஆகியவற்றின் விளக்கத்திற்கு ஈடு இணை உண்டோ? கிடையாது, கிடையாது.

அவர் முதுமைக் காலத்தில் பிறந்த பாடல்களிலே என்ன காண்கிறோம்? சோர்வா? அச்சமா? இரண்டும் இல்லை.

வீரத் தமிழின் முழக்கம் காண்கிறோம். போராட்ட வீரரின் வீரச் சூளுரைகளைக் கேட்கிறோம். வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய பேராற்றலின் நேர்மையைப் பார்க்கிறோம்; பணிகிறோம்; போற்றுகிறோம்.

  • பொதுவுடைமை-இயற்கை நெறி, பக். 15,

222