பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கியல் சார்பை விடுத்து விடுத்துத் தேவியல் சார்பைச் சேரச் சேர

இருமை மடியும் ஒருமை படியும்;’’’

வீரன் யார்? அதற்கு எடுத்துக்காட்டு காட்டியபின் தமிழ் முனிவர் திரு. வி. க மாந்தருள் மாணிக்கம் யார் என்று விளக்கம் கூறுகிறார். அவர்கள் சிறப்பியல்புகள் யாவை?

‘கோணல் மலிந்த ஆணவம் அற்றவர்

இகலைத் தாண்டி இனிமை அடைந்தவர் புகழை நீந்திப் புனிதம் உற்றவர் தெய்வச் சேய்களாம் சிறப்புப் பெற்றவர் தன்மைத் தெய்வப் பெண்மை உடையவர்* பொய்மை அறியார் புறஞ்சொல் தெரியார்

அது சரி அவர்களுடைய செய்கைகள் யாவை?

“தீய ரிடத்திலும் கோய ரிடத்திலும்

பாவ ரிடத்திலும் பணிகள் செய்வர் வழுக்கி வீழ்ந்தவர் வாழ்க்கை பண்பட ஒழுக்கத் தொண்டுகள் பழுக்க ஆற்றுவர்*

இத்தகையோரை எவ்வாறு அழைக்கிறார் திரு.வி.க?

“ அவரே அந்தணர் அவரே முனிவர்

அவரே சித்தர் அவரே புத்தர் அவரே பெரியர் அவரே தொண்டர் அவரே இனியர் அவரே மனிதர்:*

  • இருமையும் ஒருமையும்-ஒருமைப் பேறு.198.

200-ம் வரி, பக். 18.

  • மெய்கண்டவர் நி ைல'-பக்-28, 29

360-365-ம் வரிகள்.

  • முன்கூறிய நூல் பக். 29, 366-369 வரிகள்,
3 f : y 3 370-374 வரிகள்

231