பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழி, அருளாட்சியே மக்களாட்சி என்று தெளிவுப்படுத்தும் பகுதியும், சமயம் சன்மார்க்கம் அமைதியை கடைப்பிடிக்கும் வழிகள் முதலியன இடம் பெறுகின்றன.

தேவைக்கு மேல் பொருளிட்டலைக் கண்டிக்கும் மார்க்ளியம் அல்லது புதுமை புரட்சி. அதனையே காந்தியடிகள் அருளுடன் கூடியதாக இருக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ளார். முந்தையது மறப் புரட்சி அல்லது பொருட் புரட்சி. பிந்தியதோ அருட் புரட்சி. நம் நாட்டிற்கு உகந்தது எது என்றும் திரு. வி. க கூறுகிறார்.”

ஆட்சி முறைகளிலும் சிறந்தது அருளாட்சியே. ஏன்? இந்த ஆட்சி முறையில், பிற உயிர்களுக்குத் தொல்லை ஏற்படுவதில்லை; அதனால் துன்பமில்லை. தொல்லை தராதவனை எ ல் ல : உயிரும் தொழும்; இந்த நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும்; வளர்க்க வேண்டும்; போற்ற வேண்டுமென்கிறார் திரு.வி.க.

‘எவ்வுயிர்க்கும் தீங்கெண்ணா எண்ணமே நல்ல தந்தச் செவ்வி வளர்த்தல் சிறப்பு'**

மக்கள் ஆட்சி என் செய்யும்?

‘மக்களின் ஆட்சியே மாசுகளைப் போக்குதற்குத்

தக்கமருந்தென்று சாற்று: ‘***

இந்த அருளாட்சியின் அடித்தளமாவது எது?

  • இதே கருத்து-புதுமை வேட்டல் 8-'அறப் புரட்சி’ பக். 30 என்ற செய்யுளில் இருப்பதைக் காணலாம்

தக்கது. * இருளில் ஒளி, எண்ணம் 45-குறள் வெண்பா

பக். 34

      • , > * 33- பக். 20,

235