பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. துன்பம் ஒழிக்க

துன்பமொழிக்க விருப்பு வெறுப்பில்லா இறைவனடி

சேர்தல்,

7. மனக் கவலையைத் தீர்க்கும் மருந்து

இறைவன் திருவடியே மனக் கவலையை அழிக்க

வல்லது.

8. பாவக் கடலை கடக்க

பாவக் கடல்களை கடத்தற்கு இறைவன் திருவடியே துணை.

9. பிறவிக் கடல் ந்ேத

இறைவனடி சேர்ந்தோர் பிறவிக் கடலை நீந்துவர்.

10. இறைவனடியை வணங்க வேண்டும். ஏன்?

இறைவனடியை வணங்கா தலைகள் பயனற்றவாம். இக்கருத்துக்கள் எதை வலியுறுத்துகின்றன? திருக்குறள் ஒரு பொது மறை அன்றோ? இனி அடுத்து வரும் அதிகாரம் வான் சிறப்பு. வான் சிறப்பில் மழையின் சிறப்பை விளக்குகிறார் வள்ளுவர். கலித்தொகையில்

‘வான் தருங் கற்பினால் என்ற சொற்கள் மழையின் சிறப்பைக் கூறுவனவே.

கடவுள் வாழ்த்துக்குப் பின் வான் சிறப்பு இடம் பெறுவானேன்?

விளைச்சலுக்குத் தேவை அளவான மழை; தேவையான காலங்களில் பொய்யாது பெய்யும் மழை; அளவான மழை ஆக்கமுடைய அறத்திற்கு வழிகோலும். அறம் நன்முறையில்

20