பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”

இவ்வதிகாரத்தின் பொருளை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம்.

முதலாவது மனை மான்பு:

முதல் மூன்று குறட்பாக்கள் இப்பொருள் பற்றிக் கூறுவன இரண்டாவதாக விளக்கப்படும் பொருள் கற்பு.

நான்காம் குறளிலிருந்து ஒன்பதாவது குறள் முடிய கற்பு: அதன் தன்மை; அது பெண்களைப் பற்றியது மட்டுமன்றி ஆண்களுக்கும் உரியதே எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார் புலவர் பெருமான்.

மூன்றாவதாக வரும் பொருளான மக்கட்பேறு, இறுதி குறட்டாவில் இடம் பெறுகிறது.

ஆவது பெண்ணாலே!

இல்வாழ்க்கையின் உயிர் பெண். வள்ளுவர் காலத்தி லேயே பெண்ணை இழிவாகக் கருதினர். இந்தத் தவறான க ரு த் ைத ப் ேப ா க் க வ ள் ளு வ ர் எடுத்த முயற்சிகளே இவ்வதிகாரத்திலுள்ள பாக்கள். பெண்ணை வாழ்க்கைத் துணை என்றார். இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்த ஒருவனுக்குப் பெண் மிகவும் தேவை. அவன் வாழ்க்கை நன்முறையில் நடைபெறா விட்டால், பழி வரும். எத்தகைய பழியும் வராது காக்கும் மாண்பு வாழ்க்கைத் துணையினுடையது.

பழி வராமல் தடுப்பது எது? கற்பு. வாழ்க்கைத் துணையின் கற்பொழுக்கத்தில் விளையும் பயன் என்ன? நன் மக்கட்பேறு, கற்பொழுக்கத்தால் வளரும் உலகமே பெருமை கூடியது. அமைதியும் இருக்கும். பிறவற்றால் அல்ல.

45