உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

முனனுரை

என்னை உருவாக்கிய ஆசிரியப் பெருமான்

அன்று,

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு, திருவையாற்று அரசர் கல்லூரியிலே தமிழ் வித்து வான் படித்துக் கொண்டிருந்தேன் நான்.

எங்கள் கல்லூரி மாணவர் பலரும் சேர்ந்து ஒரு கழகம் அமைத்திருந்தனர். அக்கழகத்தின் பெயர் திருவள்ளுவர் கழகம் என்பது. அதன் அமைச்சராக விளங்கியவர் சிவகுரு நாதன் என்பவர்.

திருவள்ளுவர் கழகத்திலே தமிழ் நூல்கள் இருந்தன. இலவசமாக அந்நூல்கள் மாணவர்க்கு வழங்கப்பட்டு வந்தன. ஒய்வு நேரங்களில் இந்நூல்களைப் படிக்கலாம், பயன் பெறலாம் என்பதற்காகவே அந்நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

ஒரு நாள். திருவள்ளுவர் கழகத்திலிருந்த நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திரு. வி. கவின் மனித வாழ்க் கையும் காந்தியடிகளும்’ என்னைக் கவர்ந்தது. நூலை எடுத்தேன்; பக்கங்களைப் புரட்டினேன். அதில் தோய்ந் தேன்; மூழ்கினேன்; முங்கினேன்; ஆழ்ந்தேன்; அமிழ்ந்தேன்.

ஏன்? நாட்டின் நடப்புகளே அதற்குக் காரணம். விடுதலை வேகம் எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

iv