பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளவு அழகாகத் தோன்றுகிறது! இதை அறிந்து, உணர்ந்து, அனுபவித்தது போலல்லவா உள்ளது சிறு கை!” என்ற சொல்.

அளாவிய கூழ்

உணவு ஒரு பாண்டத்தில் உள்ளதுதான். இதில் ஒரு சிறப்பும் இல்லை. ஆனால் திடீரென தனிச்சிறப்பு பெறு கிறது. அது எப்படி? --

அச்சிறு கை அதில் புரியும் விந்தைகள் எத்தனை. எத்தனை? இதைவிட வேறோர் உவகை உண்டோ? கூழ் காணாத தரை இருக்குமா? கூழ் அப்பாத தலை உண்டோ? கூழ் வழியாத சிறு கை உண்டோ?

எத்தனை, எத்தனை அற்புதங்கள்!

இத்தகைய கூழின் சுவை கெட்டு விடாதோ? கெடாது, கெடாது, கெ.வே கெடாது. ஆனால் சுவை மிகும்.

‘அமிழ்தினும் ஆற்ற இனிதே!

சாதாரணமான கூழ். இதற்கு சுவை மிகுந்து விட்டது. அமிழ்தினும் இனிதாகி விட்டது, ஏன்? சிறு கை அளாவிய தால். யாருக்கு? பெற்றோருக்கு.

அமிழ்து என்று சொல்வானேன்? அமிழ்தம் மரணத் தைப் போக்குவது. இக்கூழை உண்ணும் பெற்றோர் கவலையை மறக்கின்றனர், கவலை மறப்பதால் நரை, திரை, மூப்பு வரவே வராது. என்றென்றும் இளமை, மக்கட்பேற்றின் மாண்பு.

இந்த இன்பம் பெற்ற சிறு குடில் ஒளி பெற்றது; இன்ப வீடாகியது. பெற்றோர் மூப்பு இன்றி விளங்கினர். இத்தனை இன்பமும் வாரி, அள்ளி அள்ளி வழங்கியது யார்? மாண்புடை வாழ்க்கைத் துணை, வாழ்க மாண்புடைய பெண்மை! ஒங்குக!

52