பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்

விருந்தோம்பல் அன்புடைமையின் விளைவு; பயனும் அஃதே. சுற்றம் அறிந்தவர், நண்பர் இவர்களுக்கு மட்டும் விருந்து வைத்தல் விருந்தோம்பல் ஆகுமோ? ஆகாது. ஆகாது! ஏதோ ஒரு பலனைக் கருதி பெரிய அளவில் ஆடம்பரமான விருந்தளித்தல், விருந்தோம்பலின் ஒரு கூறு தானே? இல்லை, இல்லை!

விருந்து என்றால் புதுமை என்று பொருள். விருந்தினர் என்பவர் நாம் முன்பின் அறியாத புதியவர். இப்புதியவரை பேனல் அல்லது சோறிடுவது விருந்தோம்பல் என்று பொது வாக வழங்கப்படுகிறது. இதன் உட்பொருள் என்ன? அன்பால் தியாசஞ் செய்தல் என்பது.

விருந்தோம்பல்-பரந்த அன்பின் விளைவு,

இல்வாழ்க்கையில், வாழ்க்கைத்துணை நலத்தால், மக்கள் பேறு ஏற்படும். அன்பு ஊற்று கொஞ்சங் கொஞ்சமாக படிப்படியே திறக்கப் பெறுகிறது. தன்னளவில், தன் மனைவி மக்கள், சுற்றம் என்ற எல்லைக்குள் உட்பட்டு இருந்த அன்பு, விரிவு பெறுகிறது. பரவும் அன்பு பெருகி மற்றவர்க்கும் பகிர்ந்தளிக்கப் படுகிறது. இது தொண்டாக மாறுகிறது. இதுவே அந்தண்மை. அந்தண்மையாவது எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவது.

விருந்தினரை உபசரிக்கத் துண்டுவது அன்பே, அஃதே அந்தண்மை; செந்தண்மை. ஆகவே விருந்தோம்பல் அன்பு வண்ணமாவது, அன்பு பெருக்கே விருந்தோம்பல். ஆதலின், இவ்வதிகாரம் அன்புடைமையைத் தொடர்ந்து வருகிறது.

அதிகாரத்தின் பகுதிகள்:

இவ்வதிகாரம் நான்கு பகுதிகள் கொண்டது.

விருந்தோம்பலின் விழுப்பம் பற்றிக் கூறுவது முதல் பகுதி,

5 &