பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தினரை எதிர்பார்க்க வேண்டும். விருந்தோம்பல் இடையறாத ஓர் செயல். அவ்வாறு செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்க வேண்டும். இதன் பயன் என்ன? அவன் பெரியோருக்கு இனியவனாவான்.

விருந்தோம்பு முறை

‘விருந்தோம்பல் முறை அனைவரும் அறிந்ததே. ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் பார்ப்போமா? “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து’ அனிச்சமலர் மோந்தால் உடன் வாடி விடும். விருந்தினரோ முகபாவம் மாறுபட்டிருந்தால், வாடுவர். எனவே முகந்திரிந்து விருந்தினரை ஒம்பலாகாது. எனவே விருந்தினரைக் கண்டு முகஞ் சுளிக்கக் கூடாது. அனிச்ச மலர் மென்மையானதும், சிறப்பானது கூட.

இரண்டு பூக்கள்

இப்பாட்டில் இரண்டு பூக்கள் காட்சி அளிக்கின்றன. ஒன்று அனிச்சம் பூ மற்றொன்று விருந்துப் பூ அணிச்சம் பூவைக் காட்டிலும் மென்மையுடையது விருந்துப் பூவாம்.

விருந்துப்பூ மிகவும் மென்மை உடையது என்பது எவ்வாறு புலனாகிறது?

முறைப்பாடு

மென்மையானதே குழையும். வலியது குழையாது. எனவே குழையும் என்ற சொல் இரண்டு பூக்களின் மென்மைத் தன்மையை உணர்கிறது.

அகமும் முகமும்

விருந்து குழையும்போது, முதலில் அது முகத்தில் தெரியும்; ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் அகம்

61