பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வகை வேள்வியே. வேள்விக்குள்ள பயன் இதற்கும் உண்டு. நல்ல முறையில் செய்த விருந்தோம்பல் இன்பம் கொடுக்கும். விருந்தின் துணைத் துணை’ என்றார் ஆசிரியர் விளக்கும் போது.

விருந்தோம்புகிறோம். யாரை? மனிதரை. மனிதரை மட்டுமா? இல்லை. மகேசன் உருவான மனிதனை, ஏன் கடவுளையே என்று கூறுகிறார் திரு.வி.க.

இன்சொல்

விருந்தோம்பலுக்கு மட்டும் இன்சொல் தான் பேச வேண்டும் என்றிருக்கிறதா? மற்றவற்றிற்கு இனிய சொல் கூற வேண்டாமோ?

இனிய சொல் கூறுதல் இனிய மனத்தின் சான்று. மனத்தின் இனிமை சொல்லில் இன்சொல்லாக மிளிரு . இத்தகை இன்சொல்லின் வலிமையை குறிக்கத்தானே. என்னவோ இந்த அதிகாரத்தில் பல பல இடங்களில் இது பெரிதும் சாட்சியளிக்கிறதை பாக்களில் காண்கிறோம்.

இனிமையும் மாசற்ற நிலையும் இனிய சொற்களை ஈனும், அன்பு பெருகப் பெருக மனமாக அகலும். மன மாசற்ற நிலை ஏற்படும். அதன்பின் தானே அழுக்காறு போன்றைை ஒடி மறையும்.

இன்சொல் என்ற இவ்வதிகாரத்தையும் மூன்று கூறு கொண்: தாகப் பிரிக்கலாம்.

இன்சொல் எவ்வளவு இன்றியமையாதது என்பதை வற்புறுத்தவே முதலில் இன்சொல் மாண்பு வைக்கப்பட்டது போலும்! இதற்கென முதல் நான்கு பாக்கள் ஒதுக்கி யிருப்பதும் அதைக் கருதித்தானோ?

அடுத்து, எந்த ஒன்றிற்கும் பயன் கூற வேண்டிய நிலை, இன்றுள்ளது. இதற்காகத்தான் பொய்யாமொழியார் இன்சொல்லின் பயனை அடுத்து வைத்து, இதை விவரிக்க

63